Thursday, October 29, 2009

அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே

பாடல்: அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே
திரைப் படம்:
பாடியவர்: பீ.சுசீலா - எல்.ஆர்.ஈஸ்வரி

சுசீலா: அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ வடிவத்தில் சுந்தரனோ
யாராயிருந்தாலும் என்ன

ஈஸ்வரி: அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே
என் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனும் வடிவத்தில் சுந்தரனும் வந்தாலும் இடமில்லை சொன்னேன்

சுசீலா: உள்ளத்தைத் தொட்டால் உண்டாவது
கை தொட்டதும் எண்ணம் ஒன்றாவது
ஆசை ஊஞ்சல் ஆடும் பாவை காதல் நெஞ்சம்
தாபத்தில் தானின்று தள்ளாடுது

ஈஸ்வரி: மை வைத்த கிண்ணம் கண்ணல்லவா
நீ பொய் வைத்து சொல்லும் பெண்ணல்லவா
மை வைத்த கிண்ணம் கண்ணல்லவா
நீ பொய் வைத்து சொல்லும் பெண்ணல்லவா
மாலை சூடும் தோளில் ஆடும் காலம் நேரம்
தெய்வத்தை கேட்டிங்கு நான் சொல்லவோ
தெய்வத்தை கேட்டிங்கு நான் சொல்லவோ

சுசீலா: அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
ஈஸ்வரி: வானத்து சந்திரனும் வடிவத்தில்
சுந்தரனும் வந்தாலும் இடமில்லை சொன்னேன்

சுசீலா: சித்திரக் கன்னம் புண்ணாகவே
உன் சிற்றிடை கொஞ்சம் திண்டாடவே
பாலும் தேனும் மேலும் மேலும் ஊறும் நேரம்
பூ மேனி பன்னீரில் நீராடுமே
ஈஸ்வரி: இன்பத்தின் பாதை நீ கண்டது
என் எண்ணத்தின் எல்லை யார் கண்டது
இன்பத்தின் பாதை நீ கண்டது
என் எண்ணத்தின் எல்லை யார் கண்டது
பாசம் நேசம் தியாகம் பண்பு நாலும் கொண்டு
வாழ்கின்ற ஆனந்தம் நான் கண்டது
வாழ்கின்ற ஆனந்தம் நான் கண்டது

சுசீலா: அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ வடிவத்தில் சுந்தரனோ
யாராயிருந்தாலும் என்ன
ஈஸ்வரி: வானத்து சந்திரனும் வடிவத்தில்
சுந்தரனும் வந்தாலும் இடமில்லை சொன்னேன்
சம் சம் சம் சம் சம் சம் சம்சம்...


No comments:

Post a Comment