Thursday, October 29, 2009

ஆண் கவியை வெல்ல வந்த

படம் : வானம்பாடி
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : கே.வி.மஹாதேவன்
நடிகர்கள் : எஸ்.எஸ்.ஆர்., தேவிகா

கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே
சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க !

பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வானேறி தவழ்ந்து வரும் நிலவே
மதியறியாச் சிறு மகளும் கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே !

ஆங்.. நடக்கட்டும்

ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக - நீ
அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக

பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக - உங்கள்
பெட்டகத்தைத் திறந்து வைத்துப் பொருளை அள்ளித் தருக

இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா? - அது
இளமை பொங்க வீற்றிருக்கும் கன்னி மலரையா
வலையில்லாமல் மீனைப் பிடிக்கும் தேசம் என்ன தேசம்?- அது
வாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம்

(ஆண்)

காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்? - அது
கன்னியரைக் கண்டவுடன் கால்கள் தள்ளாடும்
காதலித்தாள் மறைந்து விட்டால் வாழ்வு என்னாகும்? - அன்பு
காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்

ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு - அந்த
ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது
வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு ? - தன்
வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது

(ஆண்)

உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க
இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?
ம்ம் கேக்க சொலூங....

தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது.. (ஆ..)
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது.. (என்னது?)
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது (ஓஹோஹோஹோஹோ) - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

ஹாஹா.. கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?
ஊக்கும்.. அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே
நான் திணர்றேனாவது..
பின்ன என்ன ?
வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க
முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்
சரி சொல்லுங..

அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு

(பெண்)


No comments:

Post a Comment