Thursday, October 29, 2009

ஆசையா.. கோபமா..

படம் : இரு வல்லவர்கள்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வேதா
நடிகர்கள் : ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி

உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மீதென்ன படிப்பு
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா..ஹோய்..
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா.

உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா..ஹோய்..
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா.

விழியழகின் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம் என்ன
காவல் இல்லாத காட்டு மலர்கள்
காட்டும் கண்ணாடி என்ன
பூந்தோட்டத்தில் ஆடுவதென்ன
அந்தக் கோலத்தை மூடுவதென்ன

(ஆசையா)

என் இதழில் இளமேனியில்
இந்தக் கோலம் நீ காணலாமா
கேட்பார் இல்லாமல் தோட்டம் புகுந்து
ஆட்டம் நீ ஆடலாமா
மலர் சூடும் முன்னால் என்ன ராகம்
மணமாகும் முன்னால் என்ன தாளம்

(ஆசையா)


No comments:

Post a Comment