Thursday, October 29, 2009

அழகிய மிதிலை நகரினிலே

பாடல்: அழகிய மிதிலை நகரினிலே
திரைப் படம்: அன்னை (1962)
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
வரிகள்: கண்ணதாசன்


ஸ்ரீனிவாஸ்: அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
சுசீலா: பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதயை அவள் பார்த்திருந்தாள்
பாதயை அவள் பார்த்திருந்தாள்

ஸ்ரீனிவாஸ்: அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
சுசீலா: பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

சுசீலா: காவியக் கண்ணகி இதயத்திலே
காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே

ஸ்ரீனிவாஸ்: கோவலன் என்பதை ஊர் அறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும்

இருவரும்: அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

ஸ்ரீனிவாஸ்: பருவத்து பெண்கள் தனித்திருந்தால்
பருவத்து பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்

சுசீலா: இளையவர் என்றால் ஆசை வரும்
இளையவர் என்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

சுசீலா: ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
ஸ்ரீனிவாஸ்: உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
சுசீலா: இருவர் என்பது மாறி விடும்
இருவர் என்பது மாறி விடும்

இருவரும்: இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

No comments:

Post a Comment