Thursday, October 29, 2009

அழைக்காதே

பாடல்: அழைக்காதே
திரைப் படம்: மணாளனே மங்கையின் பாக்கியம்
பாடியவர்: பி.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: ஆதி நாராயண ராவ்
வரிகள்: டி.என்.ராமைய்யா தாஸ்
நடிகை: அஞ்சலி தேவி

ஆஆஆஆஆஆஅ
குழுவினர்: ஆஆஆஆஆஆஆ
சுசீலா: அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்

அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே
குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

சுசீலா: எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: இகமதில் நானே பிரிந்திடுவேனா
எனை மறந்தாடிட சமயமிதானா
எனை மறந்தாடிட சமயமிதானா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே
குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

சுசீலா: கதலினாலே கானத்தினாலே
குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: காவலனே என்னை சபையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே
குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ


அழகிய மிதிலை நகரினிலே

பாடல்: அழகிய மிதிலை நகரினிலே
திரைப் படம்: அன்னை (1962)
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
வரிகள்: கண்ணதாசன்


ஸ்ரீனிவாஸ்: அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
சுசீலா: பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதயை அவள் பார்த்திருந்தாள்
பாதயை அவள் பார்த்திருந்தாள்

ஸ்ரீனிவாஸ்: அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
சுசீலா: பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

சுசீலா: காவியக் கண்ணகி இதயத்திலே
காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே

ஸ்ரீனிவாஸ்: கோவலன் என்பதை ஊர் அறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும்

இருவரும்: அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

ஸ்ரீனிவாஸ்: பருவத்து பெண்கள் தனித்திருந்தால்
பருவத்து பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்

சுசீலா: இளையவர் என்றால் ஆசை வரும்
இளையவர் என்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

சுசீலா: ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
ஸ்ரீனிவாஸ்: உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
சுசீலா: இருவர் என்பது மாறி விடும்
இருவர் என்பது மாறி விடும்

இருவரும்: இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

அய்யனாரு நெறஞ்ச வாழ்வு

படம் : காவல் தெய்வம்
குரல் : தாரபுரம் சுந்தரராஜன், சுசீலா

நடிகர்கள் : சிவகுமார், லட்சுமி

அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
உன் மனசும் என் மனசும் ஒண்ணு போல இருக்கணும்
ஓ...ஓ....ஓஓஓ

பள்ளியறைத் தனிமையிலே
பாலும் பழமும் கொடுக்கணும்
பட்டுக் கன்னம் ரெண்டும் நல்ல
வெக்கத்திலே சிவக்கணும்
அறைக்கு வெளியே தோழிப் பெண்கள்
கலகலன்னு சிரிக்கணும்
அடுத்த நாளு விடிஞ்சதும்தான்
அடைச்ச கதவத் திறக்கணும்
ஓ...ஓ..ஓ.ஓ.ஓ.....ஓ

(அய்யனாரு)

கஞ்சிக் கலயம் சுமந்து நானும்
தண்டை குலுங்க நடக்கணும்
நடந்து வரும் அழகைப் பாத்து
பசியும் கூடப் பறக்கணும்
அய்யனாரு கோயிலுக்கு
ஆண்டுதோறும் படைக்கணும்
அம்மா மனசு குளிரணூம்
ஆண்டவன் கண் தொறக்கணும்
ஓ...ஓ..ஓ.ஓ.ஓ.....ஓ

(அய்யனாரு)


ஆயிரம் நிலவே வா

பாடல்: ஆயிரம் நிலவே வா
திரைப் படம்: அடிமைப் பெண்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
வரிகள்: புலமைப் பித்தன்
நடிப்பு: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

எஸ்.பி.பி: ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

எஸ்.பி.பி: நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத பொன் மேனி தாராயோ
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

சுசீலா: மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட
இருவரும்: ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

எஸ்;பி.பி: அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
சுசீலா: இன்பம் இதுவோ
எஸ்.பி.பி: இன்னும் எதுவோ
இருவரும்: தந்தாலும் ஆகாதோ

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட
இருவரும்: ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

எஸ்.பி.பி: பொய்கை எனும் நீர்மகளும் போவாடை போர்த்திருந்தாள்
சுசீலா: தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
எஸ்.பி.பி: ஆஆஆஆஆஆஆஆ
எஸ்.பி.பி: பொய்கை எனும் நீர்மகளும் போவாடை போர்த்திருந்தாள்
சுசீலா: ஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
எஸ்.பி.பி: என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
சுசீலா: அந்த நிலையில்
எஸ்.பி.பி: தந்த சுகத்தை
இருவரும்: நான் உணரக் காட்டாயோ

இருவரும்: ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழொரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட
இருவரும்: ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா


ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே

படம் : ஆட்டுக்கார அலமேலு
இசை: சங்கர் கணேஷ்
இயற்றியவர்: கண்ணதாசன்
நடிகை: ஸ்ரீபிரியா

ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்தகதை
விடுகதை அது தொடர் கதை

ஆத்தாளும் இல்லாமே அப்பனுமில்லாமெ
அனாதையா வந்த கதை சிறுகதை - அது புதுகதை

மானம் வெட்கமில்லாமே மாப்பிள்ளையாக வந்த
மன்னிப்பு கேட்ட கதை நடந்த கதை - அது முடிந்த கதை

வானம் நல்லா பொழியணும் பூமி எல்லாம் விளையணும்
மருதமலை ஆண்டவனே அருளணும் கருணை புரியணும்

அத்திக்காய் காய் காய்

பாடல்: அத்திக்காய் காய் காய்
திரைப் படம்: பலே பாண்டியா
இசை: விஸ்வனாதன் -ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி. எம்.சௌந்தர ராஜன்,
பீ.சுசீலா, பீ.பீ.ஸ்ர்னிவாஸ், ஜமுனா ராணி
வரிகள்: கண்ணதாசன்
நடித்தவர்கள்: சிவாஜி, தேவிகா, பாலாஜி

சுசீலா: அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ
என்னைப் போல் பெண்ணல்லவோ

டி.எம்.எஸ்: அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓ

கன்னிக் காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
டி.எம்.எஸ்: மாதுளங் காய்
ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
சுசீலா: இத்திக்காய்
காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..ஆஆஆஆஆஆஆஆ

டி.எம்.எஸ்: இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்
சுசீலா: உருவம் காய் ஆனாலும்
பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இருவரும்: ஆத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

பீ.பீ.எஸ், ஜமுனா: ஆஹ ஹாஆஅ

ஜமுனா: ஏலக்காய் வாசனை போல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் கேட்டது போல் ட்
ஹனிமை இன்பம் கனியக்காய்
ஏலக்காய் வாசனை போல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் கேட்டது போல்
தனிமை இன்பம் கனியக்காய்
பீ.பீ.எஸ்: சொன்னதெல்லாம்
விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இருவரும்: அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஆஹா ஹாஹா ஹா ஆஆஆஆ

பீ.பீ.எஸ்: உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே சிரித்தாயோ
உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே சிரித்தாயோ
ஜமுனா: கோதை எனைக் காயாதே
கொற்றவரங்காய் வெண்ணிலா
பீ.பீ.எஸ்: இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா

அனைவரும்: ஆத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
ஆஹ ஹாஆ ஓஹோ ஹோ ஹோ...


அத்தான் என் அத்தான்

பாடல்: அத்தான் என் அத்தான்
திரைப் படம்: பாவ மன்னிப்பு
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படிச் சொல்வேனடி
அவர் கையைத் தான்
கொண்டு மெல்லாத் தான்
வந்து கண்ணைத் தான்
எப்படி சொல்வேனடி..

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படி சொல்வேனடி

ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்
ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்
சென்ற பெண்ணைத் தான் கண்டு துடித்தான்
அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான் ....
எப்படி சொல்வேனடி

மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
முத்துத் தான் உடல் பட்டுத் தான்
மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
முத்துத் தான் உடல் பட்டுத் தான்
என்று தொட்டுத் தான்
கையில் இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான் ....
எப்படி சொல்வேனடி
அவர் கையைத் தான்
கொண்டு மெல்லாத் தான்
வந்து கண்ணைத் தான்
எப்படி சொல்வேனடி..

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான் ....
எப்படி சொல்வேனடி


அத்தை மகனே போய் வரவா

பாடல்: அத்தை மகனே போய் வரவா
திரைப் படம்: பாத காணிக்கை
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசீலா
நடிகை: சாவித்திரி

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா
எந்தன் நினைவைத் தந்து செல்லவா

உந்தன் மனதைக் கொண்டு செல்லவா
எந்தன் நினைவைத் தந்து செல்லவா
அத்தை மகனே போய் வரவா

மல்லிகை மலர் சூடி காத்து நிற்கவா
மாலை இளம் தென்றல் தன்னை தூது விடவா
நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா
நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா
நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா
முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா
நிலம் பார்த்து மெதுவாக உனை நாடவா
உனை நாடி உனை நாடி ....
உனை நாடி உனை நாடி உறவாடவா

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா

அத்தை மடி மெத்தையடி

பாடல்: அத்தை மடி மெத்தையடி (கற்பகம்)
திரைப்படம்: கற்பகம் (1963)
இசை: எம்.எஸ். விஸ்வனாதன், டி.கே. ராமமூர்த்தி
வரிகள்: வாலி
நடிகர்கள்: ஜெமினி, கே.ஆர்.விஜயா, சாவித்திரி.

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா

அத்தை மடி மெத்தையடி...
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ.

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்
அதை மான் குட்டி கேட்டு கண் மூடும்

ம்ம்ம்.. அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ...

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை

அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ...


ஆசையா.. கோபமா..

படம் : இரு வல்லவர்கள்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வேதா
நடிகர்கள் : ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி

உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மீதென்ன படிப்பு
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா..ஹோய்..
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா.

உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா..ஹோய்..
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா.

விழியழகின் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம் என்ன
காவல் இல்லாத காட்டு மலர்கள்
காட்டும் கண்ணாடி என்ன
பூந்தோட்டத்தில் ஆடுவதென்ன
அந்தக் கோலத்தை மூடுவதென்ன

(ஆசையா)

என் இதழில் இளமேனியில்
இந்தக் கோலம் நீ காணலாமா
கேட்பார் இல்லாமல் தோட்டம் புகுந்து
ஆட்டம் நீ ஆடலாமா
மலர் சூடும் முன்னால் என்ன ராகம்
மணமாகும் முன்னால் என்ன தாளம்

(ஆசையா)


அரும்பாகி மொட்டாகி பூவாகி

படம் : எங்க ஊரு காவக்காரன்
குரல் : தீபன் சக்ரவர்த்தி, சுசீலா
இசை : இளையராஜா
நடிகர்கள் : ராமராஜன், கௌதமி

அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தைக் காட்டு..
கையிரண்டு சேர்த்து

(அரும்பாகி)

ஜாதகத்தைப் பாத்ததில்ல
சாதகம்தான் வேலையெல்லாம்
வேறெதையும் கேட்டதில்ல
போட்டுவிடு மாலையெல்லாம்
மணக்கும் சந்தனம் பூசட்டுமா
இனிக்கும் சங்கதி பேசட்டுமா
எதுக்கும் உஙப்பனை கேக்கட்டுமா
அப்புறாம் உன் கிட்ட பேசட்டுமா
பொன் ஆவாரம்பூ என் காதோரமா
ஸ்வரம் பாடும் இன்னேரம் பொன்னேரம்தான்

(அரும்பாகி)

பாய் விரிச்சு நான் படுத்தா
பால் எடுத்து வாடி புள்ள
பல கதைய பேசிப்புட்டா
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள
பசிக்குப் பந்தியப் போடட்டுமா
ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா
தவிச்சு நிதமும் கேக்கட்டுமா
புடிச்சுக் கையில சேக்கட்டுமா
எம் மச்சானுக்கு அட.. என்னாச்சுது
அது பூவாயி பின்னால பித்தானது

(அரும்பாகி)


அன்று ஊமைப் பெண்ணல்லோ

பாடல்: அன்று ஊமைப் பெண்ணல்லோ
திரைப் படம்: பார்த்தால் பசி தீரும்
பாடியவர்: பி.சுசீலா - ஏ.எல்.ராகவன்
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி

சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ

மணிப் புறாவும் மாடப் புறாவும் மனசில் பேசும்
பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ
மணிப் புறாவும் மாடப் புறாவும் மனசில் பேசும்
பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ

ராகவன்: ஓஓஓஓஓ
ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

ஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஹோய்
வண்ணத் தமிழ் சேலை கட்டிக் கொண்டல்லோ
சுசீலா: கட்டிக் கொண்ட ஆடை ஒட்டிக் கொண்டல்லோ
ராகவன்: கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
சுசீலா: நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
இருவரும்: நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இந்த நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இந்த நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

சுசீலா: மணிப் புறாவும் மாடப் புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ
ராகவன்: ஓஓஓஓஓ
ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹொ ஹோ

ராகவன்: ஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஹோய்
காட்டில் வந்த வேடன் மானைக் கண்டல்லோ ஹோய்
சுசீலா: மானைக் கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ ஓ
ராகவன்: இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
சுசீலா: அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ
இருவரும்: தூது சென்ற காதல் பாடி வந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
தூது சென்ற காதல் பாடி வந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

சுசீலா: மணிப் புறாவும் மாடப் புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ
ராகவன்: ஓஓஓஓஓ
ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹொ ஹோ

இருவரும்: ஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஹொஹோ ஹோய்


அன்று வந்ததும் இதே நிலா

படம் : பெரிய இடத்துப் பெண்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வி-ரா
நடிகர்கள் : எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ.....ஆ......
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா

(அன்று)

அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா
ஆ... ஆ...
கவியில் ஆடிய பிள்ளை நிலா

(அன்று)

காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா
ஆ... ஆ...
பாலைவனத்தின் வண்ண நிலா

நாடுதோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா
பார்த்து பார்த்து சலித்ததிலா
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா
ஆ... ஆ...
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா

(அன்று)


அன்றொரு நாள் இதே நிலவில்

படம் : நாடோடி
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : எம்.ஜி.ஆர், பாரதி

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே - நான்
அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அன்று ஒரு நாள் ஆனந்தத் திரு நாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே.. நீ
பார்த்தாயே வெண்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே - நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே .. நீ
சாட்சியடி வெண்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே


அண்ணன் ஒரு கோயில்

படம் : அண்ணன் ஒரு கோவில்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம் எஸ் வி
நடிகை: சுமித்ரா

அண்ணன் ஒரு கோயில் என்றால் தஙை ஒரு தேபமன்றோ
அன்ரு சொன்ன வஎதமென்றோ அதன் பஎர் பாசமன்றோ
(அண்ணன் ஒரு...

பொன்னை வைத்த இடத்தினிலஎ பூவைத்துப் பார்ப்பதற்கு
அண்ணனின்றி யாரும் உண்டோ அதன் பஎர் பாசமன்றோ
(அண்ணன் ஒரு...

தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தை இல்லை
கண் திறந்த நஎரமுதல் கைகொடுத்த தெய்வமன்றோ
அதன் பஎர் பாசமன்றோ
கண்ணன் மொழி கேதை என்று கட்ர்ரவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கேதையன்றோ
அதன் பஎர் பாசமன்றோ
(அண்ணன் ஒரு...


அங்கே மாலை மயக்கம் யாருக்காக

படம் : ஊட்டி வரை உறவு
குரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.
பாடல் : கண்ண்தாசன்
நடிகர்கள் : சிவாஜி, கே.ஆர்.விஜயா

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்க்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

(அங்கே)

ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

(அங்கே)

கேட்டுக் கொள்வது காதலின் இனிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
ஆஹாஹாஹா..ஆஹாஹாஹா
ஓஹோஹோஹோ.ஹ¥ஹ¥ஹ¥ஹ¤ம்..

(அங்கே)

ஆண் கவியை வெல்ல வந்த

படம் : வானம்பாடி
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : கே.வி.மஹாதேவன்
நடிகர்கள் : எஸ்.எஸ்.ஆர்., தேவிகா

கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே
சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க !

பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வானேறி தவழ்ந்து வரும் நிலவே
மதியறியாச் சிறு மகளும் கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே !

ஆங்.. நடக்கட்டும்

ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக - நீ
அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக

பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக - உங்கள்
பெட்டகத்தைத் திறந்து வைத்துப் பொருளை அள்ளித் தருக

இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா? - அது
இளமை பொங்க வீற்றிருக்கும் கன்னி மலரையா
வலையில்லாமல் மீனைப் பிடிக்கும் தேசம் என்ன தேசம்?- அது
வாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம்

(ஆண்)

காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்? - அது
கன்னியரைக் கண்டவுடன் கால்கள் தள்ளாடும்
காதலித்தாள் மறைந்து விட்டால் வாழ்வு என்னாகும்? - அன்பு
காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்

ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு - அந்த
ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது
வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு ? - தன்
வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது

(ஆண்)

உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க
இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?
ம்ம் கேக்க சொலூங....

தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது.. (ஆ..)
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது.. (என்னது?)
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது (ஓஹோஹோஹோஹோ) - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

ஹாஹா.. கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?
ஊக்கும்.. அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே
நான் திணர்றேனாவது..
பின்ன என்ன ?
வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க
முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்
சரி சொல்லுங..

அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு

(பெண்)


அன்புள்ள மான்விழியே

படம் : குழந்தையும் தெய்வமும்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி
நடிகர்கள் : ஜெய்சங்கர், ஜமுனா

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம் - நான்
எழுதுவதென்னவென்றால் - உயிர்க்
காதலில் ஓர் கவிதை

அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம் - அதைக்
கைகளில் எழுதவில்லை - இரு
கண்களில் எழுதி வந்தேன்

நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தான முத்துச் சுடரே
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ

(அன்புள்ள)

நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தா
இடை மெலிந்தது இயற்கையல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடிபெண்மை அல்லவா
வாழ வைத்ததும் உண்மை அல்லவா

(அன்புள்ள)

அன்பு நடமாடும் கலை கூடமே

படம் : அவன்தான் மனிதன்
குரல் : டி,எம்,எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, மஞ்சுளா

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே

(அன்பு)

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே

(அன்பு)

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

(அன்பு)

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

(அன்பு)

அமுதைப் பொழியும் நிலவே

பாடல்: அமுதைப் பொழியும் நிலவே
திரைப் படம்: தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி.சுசீலா
இசை: டி.ஜி.லிங்கப்பா
நடிகை: ஜமுனா

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புது மலர் மேனி வாடி விடாமல்
புது மலர் மேனி வாடி விடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலமா ஆஆஆஆஆ
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலமா
இளமை நினைவும் இனிமை வளமும்
இளமை நினைவும் இனிமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ


அமைதியான நதியினிலே

பாடல்: அமைதியான நதியினிலே ஓடும்
திரைப் படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்கள்: டி. எம். சௌந்தர ராஜன் - பீ.சுசீலா
இசை: எம். எஸ்.வீ.- டி.கே. ஆர்
வரிகள்: கண்ணதாசன்
நடித்தவர்கள்: சிவாஜி - தேவிகா

டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்..
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னை இளம்கீற்றினிலே ஏ ஏ..ஏ ஏ...
தென்னை இளம்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை இளம்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை

டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
டி.எம்.எஸ்: ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

சுசீலா: நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வ்
அந்த பெண்மை இது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி சிடும்
காலையில் செழித்து விடும்
அந்தியில் மயங்கி சிடும்
காலையில் செழித்து விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்

இருவரும்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

ஆலயமணியின் ஓசையை

பாடல்: ஆலயமணியின் ஓசையை
திரைப் படம்: பாலும் பழமும்
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

இளகும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்...
இரு விழியாலே மாலையிட்டான்
இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணைத் தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே...
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்


அல்லித் தண்டு காலெடுத்து

பாடல்: அல்லித் தண்டு காலெடுத்து
திரைப் படம்: காக்கும் கரங்கள்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் -பீ.சுசீலா
இசை: கே.வீ.மஹாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
நடிஅகர்கள்: எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி

சுசீலா: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

டி.எம்.எஸ்: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

பொல்லாத சிரிப்பும்
பொன் மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்

பொல்லாத சிரிப்பும்
பொன் மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
முத்து நவரத்தினங்களை
அவன் மோகனப் புன்னகை வெல்லும்
முத்து நவரத்தினங்களை
அவன் மோகனப் புன்னகை வெல்லும்

டி.எம்.எஸ்: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

சுசீலா: நீரோடை போலே நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ
ஊராரின் கண் படலாமோ

நீரோடை போலே நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ
ஊராரின் கண் படலாமோ
அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருப்பேனோ
அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருப்பேனோ

இருவரும்: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

அலங்காரம் கலையாத சிலை

படம் : ரோஜாவின் ராஜா
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, வாணிஸ்ரீ

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே

பொட்டோடு பூக்கண்ட பன்னீர் மரம்
பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்
நீரோடு விளையாடிப் போகின்ற தென்றல்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்
நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்

(அலங்காரம்)

உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ
இல்லாயின் இல்லென்று நான் செல்லவோ
எங்கேனும் பூப்பந்தல் மேளங்களோடு
கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்
கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்

(அலங்காரம்)

தன் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
அழகான மலர் மாலை நாம் வாங்குவோம்
தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி
திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்
திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்

(அலங்காரம்)

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல்

பாடல்: ஆகாயப் பந்தலிலே
திரைப் படம்: பொன்னூஞ்சல்
பாடியவர்கள்: டி.எம்.ஸௌந்திர ராஜன், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
நடிப்பு: சிவாஜி, உஷா நந்தினி

டி.எம்.எஸ்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா
சுசீலா: ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

சுசீலா: பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி
மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா
பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி
மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
மீனாவின் குங்குமத்தை நான் ஆள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா

டி.எம்.எஸ்: பால் வண்ணம் பழத் தட்டு பூங்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா
பால் வண்ணம் பழத் தட்டு பூங்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா
ஊராரின் சன்னிதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாய் என்றும் சேய் என்றும் தந்தை என்றும் ஆவோமா

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

சுசீலா: கண்ணென்றும் வளை கொண்ட கையென்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள்
டி.எம்.எஸ்: பொன் மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும்
அம்மா உன் பெண் உள்ளம் ராகம் சொல்லி ஆடி வரும்

இருவரும்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா


அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா

பாடல்: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா
திரைப் படம்: எதிர் நீச்சல்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.ஸௌந்திர ராஜன்
இசை: வி.குமார்
நடிகை: சௌகார் ஜானகி, ஸ்ரீகாந்த்

சுசீலா: ஏன்னா, நீங்க சமர்த்தா?
நீங்க அசடா?
சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
அசடா இருந்தா பறிப்பேளாம்
டி.எம்.எஸ்: ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?

சுசீலா: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டு பொடவையா வாங்கிக்கறா

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

டி.எம்.எஸ்: அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்கறாண்டி..பட்டு
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
பட்டு புடவைக்கு ஏதடி?
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?

சுசீலா: உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு?
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக்
கண்டா பட்டு?
டி.எம்.எஸ்: பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
சுசீலா: நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை
நட்டுண்டா நேக்கு?
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
டி.எம்.எஸ்: சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு?
சுசீலா: எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம்
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

டி.எம்.எஸ்: ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
சுசீலா: பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?
டி.எம்.எஸ்: ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
சுசீலா: என்னத்தை செய்வேள்?
டி.எம்.எஸ்:சொன்னத்தை செய்வேன்
சுசீலா: வேறென்ன செய்வேள்?
டி.எம்.எஸ்: அடக்கி வெப்பேன்
சுசீலா: அதுக்கும் மேலே?
டி.எம்.எஸ்: ம்ம்ம் பல்லை உடைப்பேன்
சுசீலா: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
டி.எம்.எஸ்: பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?


ஆடியிலே பெருக்கெடுத்து

படம் : ராதா
குரல் : சுசீலா குழுவினர்
பாடல் :
இசை : சங்கர் கணேஷ்
நடிகை : பிரமீளா

ஆடியிலே பெருக்கெடுத்து
ஆடி வரும் காவேரி
வாடியம்மா எங்களூக்கு
வழித்துணையாக
எம்மை வாழ வைக்க
வேண்டுமம்மா சுமங்கலியாக

(ஆடியிலே)

மொய்குழலில் மலர் சூட்டி
மான்விழியில் மை தீட்டி
பொன் முகத்தில் பொட்டு வைத்து
பூவையர்கள் நலம் காக்க
நெய் வழியும் கை விளக்கை
நீரோடு மிதக்க விட்டோம்
நாயகனின் உயிர் காக்க
தாயிடத்தில் போக விட்டோம்
ஆ,...ஆ..ஆ..ஆ..

(ஆடியிலே)

வள்ளுவனின் வாசுகி போல்
வசிஷ்டனுக்கு அருந்ததி போல்
தொல்லுலகில் புகழ் விளங்க
தோகையர்க்கு துணை புரிக
பின்னுறங்கி முன் விழித்து
பிள்ளை நலம்தனைக் காத்து
கொண்டவனின் மனமறிந்து
தொண்டு செய்யும் மனம் தருக

(ஆடியிலே)


அடிக்கிற கை தான் அணைக்கும்

பாடல்: அடிக்கிற கை தான் அணைக்கும்
திரைப் படம்: வண்ணக்கிளி
பாடியவர்கள்: திருச்சி லோகனாதன், பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
நடிப்பு: மனோஹர்

தி.லோ: அடிக்கிற கை தான் அணைக்கும் ..ஏய்..பாட்றீ..
சுசீலா: அடிக்கிற கை தான் அணைக்கும்
தி.லோ: அணைக்கிற கை தான் அடிக்கும்
சுசீலா: அணைக்கிற கை தான் அடிக்கும்
தி.லோ: இனிக்கிற வாழ்வே கசக்கும்
சுசீலா: இனிக்கிற வாழ்வே கசக்கும்
தி.லோ: கசக்கிற வாழ்வே இனிக்கும் .. ம்ம்..பாட்றீ..
சுசீலா: கசக்கிற வாழ்வே இனிக்கும்

சுசீலா: அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கை தான் அணைக்கும்

தி.லோ: புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
சுசீலா: புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
தி.லோ: இருளுக்குப் பின் வரும் ஜோதி
இது தான் இயற்கையின் நியதி
சுசீலா: இருளுக்குப் பின் வரும் ஜோதி
இது தான் இயற்கையின் நியதி

அடிக்கிற கை தான் அணைக்கும்
தி.லோ: பலே
சுசீலா: அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கை தான் அணைக்கும்

தி.லோ: இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
சுசீலா: இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்

தி.லோ: விதைக்கிற விதை தான் முளைக்கும்
இது தான் இயற்கையின் நியதி
சுசீலா: விதைக்கிற விதை தான் முளைக்கும்
இது தான் இயற்கையின் நியதி
இது தான் இயற்கையின் நியதி

சுசீலா: அடிக்கிற கை தான் அணைக்கும்
தி.லோ: சபாஷ்
சுசீலா: அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கை தான் அணைக்கும்

சுசீலா: அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கை தான் அணைக்கும்


ஆண்டவனைத் தேடுகிறேன் வா

படம் : ஆயிரத்தில் ஒருவன்
குரல் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.
பாடல் : வாலி
நடிகை : ஜெயலலிதா

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

(ஆடாமல்)

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
யார் கூடுவார்..

(ஆண்டவனை)

குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
இளம்பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்
யார் தேற்றுவார்

(ஆண்டவனை)

அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே

பாடல்: அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே
திரைப் படம்:
பாடியவர்: பீ.சுசீலா - எல்.ஆர்.ஈஸ்வரி

சுசீலா: அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ வடிவத்தில் சுந்தரனோ
யாராயிருந்தாலும் என்ன

ஈஸ்வரி: அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே
என் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனும் வடிவத்தில் சுந்தரனும் வந்தாலும் இடமில்லை சொன்னேன்

சுசீலா: உள்ளத்தைத் தொட்டால் உண்டாவது
கை தொட்டதும் எண்ணம் ஒன்றாவது
ஆசை ஊஞ்சல் ஆடும் பாவை காதல் நெஞ்சம்
தாபத்தில் தானின்று தள்ளாடுது

ஈஸ்வரி: மை வைத்த கிண்ணம் கண்ணல்லவா
நீ பொய் வைத்து சொல்லும் பெண்ணல்லவா
மை வைத்த கிண்ணம் கண்ணல்லவா
நீ பொய் வைத்து சொல்லும் பெண்ணல்லவா
மாலை சூடும் தோளில் ஆடும் காலம் நேரம்
தெய்வத்தை கேட்டிங்கு நான் சொல்லவோ
தெய்வத்தை கேட்டிங்கு நான் சொல்லவோ

சுசீலா: அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
ஈஸ்வரி: வானத்து சந்திரனும் வடிவத்தில்
சுந்தரனும் வந்தாலும் இடமில்லை சொன்னேன்

சுசீலா: சித்திரக் கன்னம் புண்ணாகவே
உன் சிற்றிடை கொஞ்சம் திண்டாடவே
பாலும் தேனும் மேலும் மேலும் ஊறும் நேரம்
பூ மேனி பன்னீரில் நீராடுமே
ஈஸ்வரி: இன்பத்தின் பாதை நீ கண்டது
என் எண்ணத்தின் எல்லை யார் கண்டது
இன்பத்தின் பாதை நீ கண்டது
என் எண்ணத்தின் எல்லை யார் கண்டது
பாசம் நேசம் தியாகம் பண்பு நாலும் கொண்டு
வாழ்கின்ற ஆனந்தம் நான் கண்டது
வாழ்கின்ற ஆனந்தம் நான் கண்டது

சுசீலா: அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ வடிவத்தில் சுந்தரனோ
யாராயிருந்தாலும் என்ன
ஈஸ்வரி: வானத்து சந்திரனும் வடிவத்தில்
சுந்தரனும் வந்தாலும் இடமில்லை சொன்னேன்
சம் சம் சம் சம் சம் சம் சம்சம்...


ஆடலுடன் பாடலைக் கேட்டு

பாடல்: ஆடலுடன் பாடலைக் கேட்டு
திரைப் படம்: குடியிருந்த கோயில்
பாடியவர்கள்: டி.எம்.ஸௌந்திர ராஜன், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
நடிப்பு: எம்.ஜி.ஆர், எல்.விஜயலஷ்மி

சுசீலா: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
டி.எம்.எஸ்: ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
இருவரும்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

டி.எம்.எஸ்: கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக

கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக

சுசீலா: செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட உரியவன் நீ தானே

இருவரும்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

டி.எம்.எஸ்: கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
முள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
முள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
சுசீலா: விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு

சுசீலா: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
டி.எம்.எஸ்: ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
இருவரும்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்


அ ; ஆடை கட்டி வந்த நிலவோ

பாடல்: ஆடை கட்டி வந்த நிலவோ
திரைப் படம்: அமுதவல்லி
பாடியவர்கள்: டி.ஆர்.மஹாலிங்கம் - பீ.சுசீலா

மஹாலிங்கம்: ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

சுசீலா: துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளன் உனைக் கலாந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

மஹாலிங்கம்: அந்தி வெய்யில் நிறத்தவளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ

சுசீலா: ஆஹா..ம்ம்..லாலா..
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
மஹாலிங்கம்: அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
சுசீலா: வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மஹாலிங்கம்: மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இருவரும்: இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
மஹாலிங்கம்: நன் நேரமிதே
சுசீலா: மனம் மீறிடுதே
இருவரும்: நன் நேரமிதே
மனம் மீறிடுதே
மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம்

மஹாலிங்கம்: ஆஆஆஆ
சுசீலா: ஆஆஆஆஆ
இருவரும்: ஆஆஆ
மஹாலிங்கம்: ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

முகில் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ