Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Sunday, March 25, 2012

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

S


மாலையிட்ட மங்கை
கவிஞர் கண்ணதாசன்
டி.ஆர். மஹாலிங்கம்
எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

சித்திரத்தில் பெண்ணெழுதி ...

S

சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ!

காவியத்தில் காதலென்றால்
கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கு
கண்ணீர்தான் உன் வழியோ!

அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன்தானோ!

மன்னர் குலக் கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்துப் பெண்களுக்கு
வாய்த்த விதி இதுதானோ!

சட்டி சுட்டதடா கை விட்டதடா

S


படம் - ஆலயமணி
இசை - விஸ்வநாதன் இராமமூர்த்தி
குரல் - சௌந்தரராஜன்
வரிகள் - கண்ணதாசன்

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா